காணாமல் போனோர் அலுவலகம் – த டிப்ளோமெட் வரவேற்பு

396 0

RW01202015P_3காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படவுள்ளமை குறித்து த டிப்ளோமெட் என்ற சர்வதேச ஊடகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

அதன் விசேட கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை திறப்பதற்கான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோரது உறவினர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும், உலக தமிழர் பேரவையும் ஏற்கனவே வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.