குவான்டனாமோ சிறையில் இருந்து 15 பேர் மாற்றம்

361 0

10அமெரிக்காவின் தடுப்பு மையமான குவான்டனாமோ சிறையில் இருந்து நீண்ட காலத்துக்கு பிறகு 15 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒபாமா நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி 15 சிறைக் கைதிகள் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 யேமன் நாட்டவர்களும், 3 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 61ஆக குறைவடைந்துள்ளது.

குவான்டனாமோ சிறையில் பல தசாப்த காலமாக குற்றச்சாட்டுகள் இன்றி நூற்றுக் கணக்கான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உறுதிமொழியின் அடிப்படையில் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவதுடன், விரைவில் சிறையை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய சிறைக் கைதிகளை அமெரிக்காவுக்கு மாற்ற முயற்சி எடுத்தப் போதும், காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.