கொலன்னாவை, வனவாசலை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் அபாயம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் கூடிய மழையையடுத்து பல பாகங்களிலும் காலநிலை அவதான நிலையத்தால் வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு – அவிசாவளை வீதியின் புவாக்பிட்டிய பிரதேசத்திலும் கொலன்னாவையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளிலும் ஒரு அடிக்கு வெள்ளநீர் உயர்ந்துள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.