முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டி ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பௌத்தபிக்குகளுக்கான சீருடை விநியோகத்தில் அரசாங்க நிதியை முறைக்கேடாக கையாண்டதாக தெரிவித்து, சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தொலைதொடர்பு ஆணைக்குழுவிற்கு உரிய 600 மில்லியன் ரூபாவை அவர்கள் முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கவுள்ளது.