வடக்கு யேமனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறைந்த பட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர்.
தன்னார்வஅமைப்பு ஒன்றினால் நடத்தப்படும் வைத்தியசாலை ஒன்றே இந்த தாக்குதலுக்கு உள்ளானது.
இதில் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
சவுதி தலைமையிலான கூட்டுப் படையினரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதனை கூட்டுப்படையினர் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.