பிரதமர் மோடி, மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங்சான் சூகியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது நினைவு பரிசாக அவர்(ஆங்சான் சூகி) எழுதிய ஆய்வு கட்டுரையின் நகல் ஒன்றை அவருக்கு வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

ஆங்சான் சூகியின் தாயார் பர்மாவுக்கான(இன்றைய மியான்மர்) இந்திய தூதரக அதிகாரியாக 1960-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதனால் ஆங்சான் சூகி தனது சிறுவயதில் பல ஆண்டுகள் இந்தியாவில் வசிக்க நேர்ந்தது.
டெல்லி ஜேசுஸ் அண்ட் மேரி கான்வென்டில் பள்ளி படிப்பை படித்த அவர் 1964-ல் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். 1986-ம் ஆண்டு இமாசலபிரதேச மாநிலம் சிம்லா நகரில் உள்ள இந்திய சிறப்பு கல்வி நிறுவனத்தில் பயின்றபோது(ஐ.ஐ.ஏ.எஸ்.) ‘காலனி ஆதிக்கத்தில் பர்மீஸ் மற்றும் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தின் வளர்ச்சி, மேம்பாடு- ஓர் ஒப்பீடு‘ என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரை ஒன்றையும் சமர்ப்பித்து இருந்தார்.
அந்த கட்டுரையின் அச்சிட்ட சிறப்பு நகலைத்தான் ஆங்சான் சூகிக்கு நினைவு பரிசாக மோடி நேற்று வழங்கினார். அதை மலரும் நினைவுகளுடன் ஆங்சான் சூகி அரிய பொக்கிஷமாக பெற்றுக் கொண்டார். இந்த தகவலை மோடி தனது டுவிட்டர் பதிவிலும் தெரிவித்து உள்ளார்.