ஏர்மா என்ற சக்திவாய்ந்த சூறாவளி கரிபியன் தீவுகளின் பார்புடா மற்றும் அன்டிகுவா தீவுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீவுகளில் உள்ள 90 சதவீதமான கட்டிடங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அங்கு ப்ரான்ஸ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென் மார்ட்டின் மற்றும் சென் பார்ட்ஸ் ஆகிய பிராந்தியங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு 7 பேர் உயிரிழந்ததுடன், 2 பேர் காயமடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அட்லான்டிக்கில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாகிய மிகவும் சக்திவாந்த இந்த சூறாவளி தற்போது மணிக்கு 295 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
தற்போது வேர்ஜின் தீவுகள் ஊடாக வடக்கு நோக்கி பயணிக்கும் ஏர்மா நாளையதினம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.