இன்று விவாதற்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் ஊடாக, நுண்ணங்கிகளை தவிர ஏனைய அனைத்து துறைகளுக்கும் வரி அறவிடப்படும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இதில் மனிதர்களுடன் மிருகங்களும் இந்த வரி சட்டமூலத்தால் பாதிக்கப்படுகின்றது.
கலைஞர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விருது பெறுவார்களாயின் அவர்கள் கூட வரிசெலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.