லண்டனில் இயங்கும் தீயணைப்பு படையினருக்கு, விலங்குகான பாதுகாப்பதற்காகவே அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை முதல் இந்த ஆண்டு ஜுன் வரையான ஒரு வருட காலப்பகுதியில், லண்டனில் 542 விலங்குகள் பல்வேறு அனர்த்தங்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.
இதற்காக லண்டன் தீயணைப்பு படையினர்க் 2 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பவுண்கள் செலவாகி இருக்கின்றன.
பெரும்பாலும் பூனைகளே அதிக அளவில் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.