20ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் இன்றையதினம் வடமாகாண சபையிலும் கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு ஏதுவாக இந்த திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரத்தை முழுமையாக நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் அமைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருந்தார்.
எனினும் குறித்ததிருத்தச் சட்டத்துக்கு பல்வேறு சீர்த்திருத்தங்களை பரிந்துரைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்த திருத்தங்கள் உள்ளடக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிப்பதாக அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையிலேயே இன்றையதினம் வடமாகாண சபையிலும் கிழக்கு மாகாண சபையிலும் இந்த சட்டமூலம் வாக்கெடுபு;புக்கு உள்ளாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.