மனித கடத்தல்களை குறைக்க அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன

2141 0

அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்மூலம் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் மூலம் மனித கடத்தலுக்கு உள்ளாகும் குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பி வர வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

இதனைதவிர, மனித கடத்தல்களை முறியடிக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், இடைமறிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் மக்கள் தொடர்பான விசாரணைகள் போன்றவையும் நடத்தப்படவுள்ளன.

இந்த உடன்படிக்கை கன்பராவில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இன்று மேற்;கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்ர் செயலாளர் மைக்கல் பிரசுல்லோ இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில முதந்த வைத்தியரத்ன ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் மனித கடத்தல்களை முறியடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வி கண்டன

இந்தநிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை பிரச்சினையை இரண்டு நாடுகளும் தீர்க்கும் வகையிலான வெற்றியை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இரண்டு நாடுகளும் பயிற்சிகளை வழங்கவுள்ளன.

 

 

 

Leave a comment