இந்தியாவின் முக்கிய ஊடகவியலாளரும், இந்துத்துவ தேசிய அரசியல் எதிர்ப்பு விமர்சகருமான கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக 3 காவற்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா இதனைத் தெரிவித்துள்ளார்.
கௌரி லங்கேஷ், தெற்கு கர்நாடகாவின் பெங்களுர் – ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
7 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், அவற்றில் நான்கு தோட்டாக்கள் அவரை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதான கௌரி லங்கேஷ், வாராந்த பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்ததுடன், தைரியமாகவும் வெளிப்படையாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது