வாக்குமூலம் அளிக்கும் பொருட்டு கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த அணி ஆதரவாளருமான பிரசன்ன ரணவீர காவல்துறையின் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று முற்பகல் 10.30 அளவில் அவர் அங்கு முன்னிலையானார்.
கிரிபத்கொடையில் உள்ள காணி ஒன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் தற்போது வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.