பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அடுத்தகட்டம் குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பணிக்காலம் கடந்த 3 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், பணிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு அதிகரிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், அந்தக் கடிதத்துக்கு இதுவரை மறுமொழி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.