சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட கடிதத்தை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய தொடர்பில், சந்திக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதனால் அவரிடம் இருந்து நட்டஈடு கோரி விரைவில் சட்டக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.