வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக இலங்கை தமிரசு கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது.
தமிழரசு கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
அதன்போது அன்டனி ஜெகநாதன், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.