படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஓட்டமாவடியைச் சேர்ந்த 5 பேரும், வாழைச்சேனையைச் சேர்ந்த 10 பேரும் முல்லைத்தீவு – சின்னபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த 2 பேரும், பொலனறுவைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த 17 பேரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட மற்றுமொருவரும் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.