தமிழ் மக்கள் பேரவையால் இறுதியில் பிரகடனம் வெளியிடப்பட்டது.

268 0

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையால் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் இறுதியில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது.

துறைசார் நிபுணர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இனப்பிரச்சனை தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் அந்த பிரகடனத்தில் ஏழு முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இனப்பிரச்சினையின் அடிப்படை காரணத்தை இனம்கண்டு,  அதை நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய வேண்டும்,

 

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, மதசார்பற்ற சமஷ்டி தீர்வே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

 

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் இயற்கையாகவே வாழும் முஸ்லிம், சிங்கள மக்களும் இந்த சமஷ்டி அலகின் சகல உரிமைகளுக்கும் உரித்தானவர்கள்.

 

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் தமக்கான அரசியல் அதிகார அலகை கோருவதற்கான உரிமைக்கு உரித்துடையவர்கள் என தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் உத்தேச அரசியலமைப்பானது, மலையகத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத் தேவைகள் என்பவற்றை திருப்திப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சர்வதேச குற்றவியல் நீதி விசாரணப்பொறிமுறை மூலம் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மேற்கொள்ளபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

 

அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களின் இந்த அரசாங்கமும் சர்வதேசத்தை ஏமாற்றும் பெயரளவிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே முற்கொண்டு செல்கிறது.

 

எனவே, சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வழியேற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a comment