ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது- வேலுசாமி இராதாகிருஸ்ணன்

564 0

மியன்மார் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது.

இந்த விடயம் தொடர்பாக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க எமது நாடும் நாட்டு மக்களும் முன்வரவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியன்மாரில் வசிக்கின்ற ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது.

இதன் காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எமது மக்களும் எமது நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுத்து ஜக்கிய நாடுகள்

சபையின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதிகளை மியன்மாருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரையில் சுமார் ஆயிரங்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான பங்களாதேசில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியன்மார் நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற ரோஹிங்யா மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது மிகவும் கவலை அளிக்கின்றது.

எனவே இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ள மக்களை மீண்டும் அழைத்து வந்து குடியமர்த்தவும் அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு எமது அரசாங்கம் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Leave a comment