பெலவத்த – அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்படும் பாதுகாப்பு படைகளின் தலைமையக கட்டிடத் தொகுதியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பார்வையிட்டார்.
நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, குறைபாடுகள் இருக்குமாயின் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி திட்டத்தை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் உயர்ந்த கட்டிடமாக நிர்மாணிக்கப்படும் தாமரை கோபுரத்தையும் ஜனாதிபதி இன்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த திட்டத்தை செயற்திறன் மிக்கதாக மேற்கொள்ளுமாறு, அங்கிருந்த பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.