அதிவேக பாதைகளில் பயண கட்டுப்பாடு- வீதி அபிவிருத்தி அதிகார சபை

953 0

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக பாதைகளில் பயணிக்கும் சாரதிகள் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் என்ற வேகத்தை பின்பற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.

அதிவேக வீதி பராமரிப்பு நடவடிக்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் வாகனங்கள் 50 மீற்றர் இடைவெளிக்கிடையே பயணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதுதவிர, வாகன முன்பக்க பிரதான விளக்கு ஒளிரச் செய்யப்பட வேண்டும் என்றும் அதிவேக வீதி பராமரிப்பு நடவடிக்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க கோரியுள்ளார்.

இதேவேளை, கடும் மழைக்காரணமாக கொழும்பு – தும்முல்ல, கோட்டை – ஓல்கொட் மாவத்தை, கனத்த சுற்றுவட்டம், கிராண்பாஸ் மற்றும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a comment