போர் வீரர்களிற்கு நீதியை உரியவாறு பெற்றுத்தருவார்கள் என  எவ்வாறு எதிர்பார்க்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்

472 0

தமது போர் வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என ஜனாதிபதி கூறும்போது, உள்ளுர் நீதிபதிகள் நீதியை உரியவாறு பெற்றுத்தருவார்கள் என  எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் மக்களை தெளிபடுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று யாழப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் காணாமல் போனோர் விடயத்தில் இந்த அரசாங்கம் எந்த ஒரு திடமான நடவடிக்கையையும் எடுக்காது என்பது தெளிவாக தெரிவதாகவும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a comment