புதிய வாக்காளர் இடாப்பில் திருத்தம் செய்வதற்கான இறுதிக் கால எல்லை நாளையுடன் (06) முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தற்பொழுது பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அதில் திருத்தங்கள் இருப்பின் அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வாக்காளர் இடாப்பில் யாருடையவாவது பெயர்கள் இடம்பெறா விடின் அது தொடர்பில் தமக்குரிய மாவட்ட செயலகத்துக்குச் சென்று முறைப்பாட்டை பதிவு செய்து கொள்ளுமாறும் ஆணைக்குழு கேட்டுள்ளது.
இந்த வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.