சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை

439 0

201608161203224440_industrialist-murder-Mannady-Chennai-police-investigation_SECVPFசென்னை மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அக்பர் (54). தொழில் அதிபரான இவர் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் படுக்கையை விட்டு எழும்பவில்லை.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் அக்பர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். வடக்கு கடற்கரை போலீசார் விரைந்து சென்று அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்தவர்களிடம் கொலை குறித்து விசாரணை நடத்தினர்.தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இதில் 3-வது மாடியில்தான் அவர் வசித்து வந்தார். வீட்டிலேயே படுக்கை அறையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது.

நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை.

அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.அதே நேரத்தில் வீட்டில் வந்து அக்பரை கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் அவருக்கு தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.இக்கொலை சம்பவம் மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.