மேல் மாகாணத்தில் 99 பட்டதாரி தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு நியமனம்

251 0
மேல் மாகாணத்தில் 99 பட்டதாரி தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு நேற்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ரா.உதயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எதிர்வரும் 11ம் திகதி மேல் மாகாண பாடசாலைகளில் தங்களின் கடமைகளை பொறுப்பேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்களுக்கான 33 நாட்கள் ஆசிரியர் சேவை முன்பயிற்சி 14ம்திகதி முதல் அளிக்கப்படும்.
மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் அவர்கள் கடமையாற்றவுள்ளனர்.கலை, வர்த்தகம் மற்றும் விஞ்ஞான பட்டதாரிகள் 99 பேருக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a comment