சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது

291 0
கடற்படையினருக்கு வழங்கிய இரகசிய  தகவலின் படி நேற்று(04)   மேற்கொண்ட நடவடிக்கையின் போது மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம்  சவுக்கு சுறாமீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   என கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
கைப்பற்றப்பட்ட சவுக்கு சுறா மீன்களுடன  சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.
 கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு பொழுதுபோக்குக்கு மற்றும் விளையாட்டுக்கு மீன்பிடியில் ஈடுபடும் எவருக்கும் ‘எலோபிடே’ வகைக்கு சொந்தமான குறித்த சவுக்கு சுறா மீன்கள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்த படகு உரிமையாளர்கள் அல்லது மாலுமிகள் இறந்த சவுக்கு சுறா உடல் அல்லது உடலின் பகுதி படகில் வைத்திருப்பது மற்றுமொரு படகுகளுக்கு பரிமாற்றுவது இறக்குதல் சேமிப்பு மற்றும் விற்பனைக்கு  அனுமதி இல்லை. எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment