கலைப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு கேள்விக்குறி

236 0

கலைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் எத்தனை வீதம் தொழில்வாய்ப்பு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார் 

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தினரால் அமரர். வேலாயுதம் ஞானமுத்துவின் ஞாபகார்த்தமாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பும், பூவல் சஞ்சிகை வெளியீடும் ஆலய முன்றலில் நடைபெற்றது.

ஆலய தலைவர் இ.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நமது ஆலயங்கள் இனிமேலாவது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான நல்ல நடத்தை என்பதை இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வானது காட்டுகின்றது.

எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமக்கு பலவாறு உதவிகள் புரிகின்றார்கள் ஆனால் அங்கு இருக்கின்றவர்களே வாழ முடியாத இடத்தில் எம்மவர்கள் சென்று வாழ்கின்றார்கள் என்றால் எவ்வளவு கடினமான வாழ்க்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்.

அவ்வாறு வாழ்கின்றவர்களுக்கு நம்முடைய சொந்தங்களைப் பற்றி ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு இருக்கின்றது.

நம்மோடு இருக்கும் போது இந்தப் பிணைப்பு இருந்ததோ தெரியவில்லை.

ஆனால் தூர விலகிச் சென்ற போதுதான் எமது அருமை பெருமை எல்லாம் அவர்களுக்குப் புலப்படுகின்றது அவற்றைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது. அந்த எண்ணத்தை அவர்கள் செயற்படுத்துகின்றார்கள் என்று தெரிவித்தார்.

Leave a comment