பொலிதினுக்கு பதிலான பிளாஸ்டிக் வகை வருகை?

233 0

பொலிதின் பாவனை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு சிலர் முயற்சிப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

சுற்றாடல் உபாயமார்க கேந்திர நிலையம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறித்த பிளாஸ்டிக் வகை இயற்கையில் உக்காது என குறித்த கேந்திரத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த வித்தானகே தெரிவித்தார்.

எனவே, குறித்த பிளாஸ்டிக் வகையை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது என உரிய அதிகாரிகளை அவர் கோரியுள்ளார்.

Leave a comment