காணாமல் போனோரின் உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

240 0

காணாமல் போனோரின் உறவுகள் வடக்கின் சகல மாவட்டத்திலும் இருந்து பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நாளை (6) கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காணாமல் போனோரின் உறவுகளை சந்திப்பதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியின் பிரகாரம் நாளை (6) ஜனாதிபதி மாளிகையில் சந்திக்கவுள்ளனர்.

மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்களே முன்னெடுக்கின்றன. காணாமல் போனோரின் உறவுகள் கடந்த 200 நாட்களாக தமது உறவுகளின் நிலையைத் தெரிவிக்குமாறு கோரி யாழ் மருதங்கேணி , கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடாத்தி வரும் சூழலில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment