அன்ரனி ஜெகநாதனுக்கு எதிராக விசாரணை

415 0

6934தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மீது விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற ஆசனம் தொடர்பாக வாக்குவாதம் இடம்பெற்று இறுதியில் ஒலிவாங்கியை தூக்கிவீசுமளவுக்கு கலகமாகியது.

இதனால் அங்கு பதட்டம் நிலவியதாகவும், இது தொடர்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன்மீது ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படவுள்ளதாகவும் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.