மேன்­மு­றை­யீட்­டுக்­கான கால அவ­காசம் நாளை­யுடன் நிறைவு

1023 0

வாக்­காளர் பெயர்ப் பட்­டியல் மேன்மு­றை­யீட்­டு­க்கான  கால அவ­காசம் நாளை 6ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாளைய தினத்­துடன்  வாக்­காளர் பெயர்ப் பட்­டி­ய­லுக்கு கையொப்பம் இடப்­பட்டு இறுதி செய்­யப்­படும். அதன் பின்னர்  எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பெயர்­களை உள்­ள­டக்க முடி­யாது என தேர்தல் செய­லகம் அறி­வித்­துள்­ளது.

2017 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் பெயர் பட்­டி­யலில் தங்கள் பெயர்கள் இல்­லையாயின் நாளைய  தினத்­துக்குள் அதனை சரி­செய்து கொள்­ளு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

2017 ஆம் ஆண்­டுக்­கான வாக்­காளர் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில்  இந்த பெயர் பட்­டியல் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத் ­த­ளத்தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­படி புதிய வாக்­காளர் பெயர் பட்­டி­யலில் உங்­களின் பெயர்கள் உள்­ள­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்­தி ­கொள்­ளு­மாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக  கொழும்பு நக­ரிலும் மேல் மாகா­ணத்தின் சில பகு­தி­க­ளிலும், ஏனைய நகர மற்றும் கிரா­மங்­க­ளிலும்  வாக்­காளர் பதி­வுகள் குறை­வ­டைந்து காணப்­ப­டு­வ­தாக சில ஆய்­வு­களின் மூல­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே உட­ன­டி­யாக மக்கள் மறு பரி­சீ­லனை செய்து தமது பெயர்கள் உள்­ள­னவா என்­பதை  உறு­தி­ப­டுத்­திக் ­கொள்ள வேண்டும் என ஆரம்­பத்தில் இருந்தே தேர்­தல்கள் திணைக்­களம் வலி­யு­றுத்­தி­ வந்துள்­ளது. இந்­நி­லையில் வாக்­காளர் பெயர் பட்­ டியல் மேன்­மு­றை­யீட்­டு­க்கான  கால அவ­காசம் நாளை 6ஆம் திகதி நிறை­வ­டை­ய­வுள்­ளது. நாளைய தினத்­துடன்  வாக்­காளர் பெயர்ப் பட்­டி­ய­லுக்கு கையொப்பம் இடப்­பட்டு இறுதி செய்­யப்­படும். அதன் பின்னர்  எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பெயர்­களை உள்­ள­டக்க முடி­யாது எனவும் , 2017 ஆண்­டுக்­கான வாக்­காளர் பெயர்ப் பட்­டி­யலில் தங்கள் பெயர்கள் இல்­லை­யாயின் நாளைய  தினங்­க­ளுக்குள் அதனை சரி­செய்து கொள்­ளு­மாறு தேர்தல் செய­லகம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

தேர்­த­லுக்­கான பெயர்ப் பட்­டி­யலில் பெயர்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள  நபர்­க­ளுக்கு மட்­டுமே எதிர்­வரும் தேர்­தலில் வாக்­க­ளிக்க இட­ம­ளிக்­கப்­படும். ஆகவே பெயர் பதி­யப்­ப­டாத நபர்கள் உட­ன­டி­யாக தேர்தல் காரி­யா­ல­யத்தில் அறி­வித்து பெயர்­களை உறு­திப்­ப­டுத்­திக் ­கொள்ள வேண்­டி­யது உங்களின் பொறுப்பாகும்.

உடனடியாக இது பற்றி தேர்தல் காரி யாலயத்திற்கு அறியத் தர முடியும். தேர்தல் குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள  தேர்தல்கள் ஆணையகத் தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் அறிந்துகொள்ள முடியும் எனவும் வலியு றுத்தப்படுகின்றது.

Leave a comment