காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் போக்குவரத்து விதிகளை மீறிய 170 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் நேற்று தெரிவித் தார்.
ஹஜ் பெருநாள் தினமான 2 ஆம், 3ஆம் திகதிகளில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த குற்றங்களுக்காக 170 பேருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.