இலங்கையின் பிரபல பாடகி டீஷா பெரேரா அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் வெளியான ரிதமிக் லோன்ஞ் என்ற பத்திரிக்கையின் முன்பக்கத்தில் அவரது போட்டோ வெளியானது. இது குறித்து டீஷா பெரேரா கூறுகையில், தன் தொழிலில் வெற்றியடைவதற்காக ஆங்கில மொழியில் பாடல் எழுதியதே தன் வாழ்நாளில் சந்தித்த மிகப்பெரிய சவால் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஒரு ரெக்கார்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இது போன்று இலங்கையிலிருந்து ஒருவர் ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறையாகும். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.