ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை அச்சுறுத்திய மாங்குளம் பொலிசார்

352 0

ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிசார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது, செல்வபுரம் முறிகண்டியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அிதிக ஒலி காணப்பட்டது, ஒலிபெருக்கியின் சத்தத்தினை குறைக்குமாறு பொலிசாரிடம் பிரதேச மக்கள் கோரியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு கடமையில் இருந்த பொலிசார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்மை தொடர்பில் அவசர அழைப்பு பொலிசாருக்கும், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாங்குளம் பொலிசாரினால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன், எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment