ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை கொண்டு நடத்த முடியாதென அறிவிப்பு

355 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை கொண்டு நடத்த முடியாதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இது தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்றபோது ஜனாதிபதி சார்பிலான சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, அதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கான நீதிமன்ற உத்தரவொன்று வழங்கப்பட வேண்டும் என கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் சிலரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment