மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை இளைஞர்கள் இரண்டு பேர் கடத்திச் சென்றுள்ள சம்பவம் திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்றுள்ளது.மேலதிக வகுப்பிற்காக குறித்த மாணவி, தனது நண்பிகளுடன் வீரவில பகுதிக்கு சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.16 வயதான மாணவியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
தனது மகள் திட்டமிட்டு கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என அவரின் தந்தை கூறியுள்ளார்.திஸ்ஸமஹாராம – ஹலம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த மாணவி இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தை மையமாக கொண்டு இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், மகளின் விருப்பதை கோட்டு வந்த அப்பிரதேச இளைஞர் ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.