32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.
இன்று மதியம் புளியங்கூடல் புதுவெளி சாவரித்திடலில் குறித்த மாட்டுவண்டி சவாரிபோட்டி இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட சுமார் 36 சோடி மாடுகள் குறித்த மாட்டுவண்டி சவாரி போட்டியில் பங்குபற்றின.
குறித்த போட்டியில் பங்குபற்றிய மாடுகள் கிட்டத்தட்ட 10 தொடக்கம் 18 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் புளியங்கூடல் மக்களின் பெரும் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த மாட்டுவண்டி சவாரியில் முதல் இடத்தை பெறுபவர்களுக்கு அரைப்பபவுண் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அத்துடன் முதல் மூன்று இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை குறித்த மாட்டுவண்டி சவாரியில் பங்குபற்றும் மாடுகளை துன்புறுத்தல் என்பது தடை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு துன்புறுத்தப்படும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.