‘புளூவேல்’ விளையாட்டை தடை மத்திய, மாநில அரசுகளுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்

12358 0

‘புளூவேல்’ விளையாட்டை உடனே தடைசெய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரையில் 19 வயதான விக்னேஸ்வரன் என்னும் கல்லூரி மாணவர் புளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்தக் கேடு கெட்ட விளையாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரியது. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, தானே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது.

இதேபோன்ற இணையதள விளையாட்டுகள் ஒரு புறம், ரம்மி சர்க்கிள்.காம் என்ற பெயரில் சூதாட்டம் நடக்கிறது. வெளிப்படையாக இந்த சூதாட்டம் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. அறிவியல் சாதனங்களை விஞ்ஞான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர அழிவுக்கும், சூதாட்டத்துக்கும், அறிவை நாசப்படுத்துவதற்கும் பயன்பட அனுமதிக்கப்படக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இவற்றை தடை செய்ய வேண்டும். இந்த வகையில், ஐகோர்ட்டு தீர்ப்பும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment