வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி ஏற்ற திலக் மாரப்பன. தமது உத்தியோகபூர்வ முதலாவது வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் சில அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன், மாரப்பனை இரு தரப்பு உறுவு குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வெள்ளிக்கிழமை இந்தியா செல்லும் மாரப்பனை இந்த விடயங்கள் தொடர்பான தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தை ஒட்டி, கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசாங்கம் 76 இந்திய கடற்தொழிலாளர்களை விடுவித்திருந்தது.
இந்திய கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டமையினை இந்தியா வரவேற்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.