கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில், மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர். அத்திக்காரி தெரிவித்துள்ளார்.
கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமையினை, தடை செய்யும் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.
இதற்கு அமைய தடைசெய்யப்பட்ட முறைமையின் கீழ் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.