இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 தொடரூந்து பயணிகள் பெட்டிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தொடரூந்து பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தவர்களால் மட்டுமே இந்த கேள்விப்பத்திர சமர்ப்பணத்தில் பங்கு கொள்ள முடியும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை அமைச்சு அறிவித்திருந்தது.
நேற்று முன்தினம் இறுதி தினமாக தீர்மானிக்கப்பட்ட இந்த கேள்விபத்திரத்திற்கு, இரண்டு நிறுவனங்கள் தமது கூறு விலையினை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னரும் தொடரூந்து பயணிகள் பெட்டிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் நேரடியாக மூன்று நிறுவனங்கள் தொடரூந்து பயணிகள் பெட்டிகளை உற்பத்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.