மண்சரிவு எச்சரிக்கை ! மக்கள் அவதானமாக இருக்கவும்

525 0

சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே மண் சரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­படும் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மக்கள் வெளி­யேறி பாது­காப்­பான  இடங்­களில் தங்­கு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. குறித்த எச்­ச­ரிக்கை 24 மணி நேரத்­திற்கு அமுலில் இருக்­கு­மென்­றாலும் தொடர்ந்து மழை­பெய்தால் அவ்­வெச்­ச­ரிக்கை நீடிக்கும்.

இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதிப் கொடிப்­பிலி கருத்து தெரி­விக்­கையில், இரத்­தி­ன­புரி, நுவ­ரெ­லியா உட்­பட மத்­திய மலை­நாட்டின் சில பிர­தே­சங்­க­ளிலும் களுத்­துறை, காலி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் தற்­போது மழை­யு­டன்­கூ­டிய கால­நிலை நில­வு­கி­றது.

எனவே தேசிய கட்­டிட ஆய்வு மையம் தற்­போ­தைக்கு கேகாலை, இரத்­தி­ன­புரி மற்றும் களுத்துறை மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இதேவேளை, மேல், மத்திய, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில், 100 மில்லி மீட்டருக்கு அதிமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை பொழியும் போது தற்காலிகமாக கடும் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment