ஹார்வே புயல் மற்றும் பலத்த மழை காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 10 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் தாக்கியது. இதனால் பெய்த இடை விடாத மழையால் இந்த மாகாணத்தில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக ஹூஸ்டன் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மழைக்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 40 ஆயிரம் வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. 1 லட்சத்து 85 ஆயிரத்து 149 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
3 லட்சத்து 25 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரம் பேர் தங்க இடம் இல்லாமல் முகாம்களில் உள்ளனர்.
அங்கு தற்போது மழை ஓய்ந்து விட்டது. ஆனாலும், தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. வீடுகளிலும், கட்டிடங்களிலும் தண்ணீர் தேங்கியபடியே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக உள்ளது. அவற்றை சுத்தப்படுத்துவதே பெரும் சவாலாக உள்ளது.
பெரும்பாலான பள்ளிக்கூட வளாகம் முழுவதும் சகதியாக இருக்கிறது. பல பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகள் தண்ணீர் தேங்கி மிதக்கிறது.உள்ளது.எனவே, 2 வார காலத்துக்கு பள்ளிக்கூடங்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில பள்ளிக்கூடங்களை ஒரு மாதத்துக்கு மேல் மூட வேண்டிய நிலை
மழை கடுமையாக பாதித்த பகுதிகளில் 10 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மழையால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.