மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசே முழுமையான காரணம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக வைகோ இன்று ஒட்டன்சத்திரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம். தமிழக அரசு முடிந்த வரை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடியது. மத்திய அரசின் உறுதியால் தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்றும் உறுதிமொழி அளித்தனர்.
ஆனால் மத்திய அரசு வழக்கம் போல் தமிழகத்தை வஞ்சித்து துரோகம் இழைத்து விட்டது. இதற்காக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது.
இந்த சாவுக்கு மத்திய அரசே முழுமையான காரணம். தற்போது பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. வன்முறையை தூண்டாத வகையில் அமைதியான முறையில் போராட வேண்டும். இவவாறு அவர் தெரிவித்தார்.