கொழும்பு துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு புதிதாக இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர திறந்துவைத்துள்ளார்.
இலங்கை சுங்கவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும் செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள இலங்கையின் வரிசீர்த்திருத்த சட்ட மூலத்தின் ஊடாக இலங்கையின் வருவாய் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர்,
இலங்கையை உலகின் பொருளாதார மத்திய ஸ்தலமாக மாற்றுவதற்கு 200 வருடங்கள் பழமையான சுங்கவரி கட்டளைச் சட்த்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.