கூட்டு ஒத்துழைப்பினை பின்பற்ற முடியாதபட்சத்தில அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும்- நவீன் திசாநாயக்க

37657 0

கூட்டு ஒத்துழைப்பினை பின்பற்ற முடியாதபட்சத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

பணம் சம்பாதிப்பதற்காக அரசியலில் ஈடுபடுகின்றவர்களால் அரசியல் துறை பெரும் பின்னடைவுக்கு முகம் கொடுத்துள்ளது.

குடிசைகளில் வாழ்ந்த சிலர் தற்போது மாளகைகளை கட்டியுள்ளனர்.

அரசாங்கம் மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

கடந்த காலங்களில் அவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களே அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அரசாங்கத்தில் அத்தகை மோசடியில் ஈடுபடுகின்றவர்கள் இருக்கலாம்.

எனினும் அமைச்சர் ரவி கருணாநாயக்க போன்றவர்கள் தமது பதவியை துறந்து, புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment