ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது நிறைவாண்டு நிகழ்வு இன்று கொழும்பு கெம்பள் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் பிரதமர் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இலங்கையில் இருந்த தனிப்பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் இடம்பெற்ற பிளவின் அடிப்படையில் தோற்றம் பெற்ற கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும்.
1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மகாஜன எக்சத் பொதுஜன பெரமுன என்ற கூட்டமைப்பில் களம் இறங்கி அதுவரை காலமும் இலங்கையில் நிலவிய வலதுசாரி மற்றும் இடதுசாரி கொள்கை கொண்ட அரசியல் கலாசாரத்தை நீக்கி நடுநிலையான கொள்கையுடைய கட்சியாக தமது ஆட்சியை நிலைநிறுத்தியது.
இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷவினால் வழிநடத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார்.
இலங்கையின் அரசியல் பிரவாகத்தில் மிகப்பொரும் கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உருவாக்கப்பட்டு நேற்றுடன் 66 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவாண்டு தினம் இன்று கொழும்பு கெம்பள் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.