நாளை மறுதினம் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சாத்திகள் பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதியில் அமைதியற்ற முறையில் செயற்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதிகளில் அமைதியற்றவகையில் செயற்படும் மாணவர்களை கைதுசெய்யுமாறு அனைத்து காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அமைதியை சீர்குழைக்கும் வகையில் செயற்படுகின்றவர்கள் கைதுசெய்யப்படும்பட்சத்தில் அவர்களது பரீட்சை பெருபேறுகள் இரத்துசெய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரிட்சையின் அனைத்து பரீட்சைகளும் நாளை மறுதினம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.