வடமாகாண முதலமைச்சர், ஆளுனர், முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இந்த மனுவை தாம் தாக்கல் செய்ததாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதேவேளை, மேலும் சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என டெனீஸ்வரன் குறிப்பிட்டார்.