வீட்டில் ஏற்பட்ட திடீர் அனத்தமொன்றின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க காயமடைந்துள்ளாhர்.
இந்த அனர்த்தம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் காயமடைந்த கீதா குமாரசிங்க கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு தாங்கி ஒன்று வெடித்தமையினாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது கீதா குமாரசிங்கவின் கை, வயிறுப்பகுதி மற்றும் பாதங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.